ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை!

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை!

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.அந்த தேர்தலின் இரு பெரிய கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி நிலவியது.அதிமுக மற்றும் திமுக மக்களின் ஓட்டுக்களை கவர இருவரும் சரிக்கு சரியான பலவித அறிக்கைகைகளை நிறைவேற்றுவதாக மக்கள் முன் வெளியிட்டனர்.அந்தவகையில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது.

அதனையடுத்து தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கியது.கொரோனா நிவாரண நிதிக்காக உதவிய சிறு பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை என பல நலத்திட்டங்களை செய்து வந்தனர்.ஓர் சில மக்கள் திமுக நன்கு தான் ஆட்சி செய்கிறது என்று கூறினாலும்,பெருமான்மையோர் தற்போது ஏறிய  விலைவாசியை கண்டித்து ஆட்சி செய்யும் முறையை விமர்சித்தும் வருகின்றனர்.

அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று அறிக்கையை வெளியிட்டது.ஆனால் தற்போது மத்திய அரசு நீட் தேர்விற்கான இளங்கலை மற்றும் முதுநிலை தேர்விற்கு தேதியை வெளியிட்டுள்ளனர்.திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பணியமர்த்திய பிறகு பிரதமர் மோடியை முதலாக சந்தித்த போது நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.பலமுறை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.ஆனால்,மத்திய அரசு அதற்கும் செவி சாய்க்கவில்லை.

தற்போது திமுக அரசே நீட் தேர்விற்கு மாணவர்களை தயாராகுங்கள் என்று கூறியுள்ளது.தமிழக அரசே அவ்வாறு கூறியதால் பொதுமக்கள் அனைவரும் அதிகளவு அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழக அரசு கூறியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் டிவிட் ஒன்றை போட்டுள்ளார்.அதில் முன்னாள் முதல்வர எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,மாணவர்களின் மருத்துவ கனவு தமிழக அரசால் கேள்விக்குறியாகிவிடும் என கூறியுள்ளார்.அத்தோடு மக்களிடம் கூறிய அறிக்கைகை நிறைவேற்ற முடியாமல் தற்போது தமிழக அரசு உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அவர்,தமிழக முதல்வரிடம் பல ஊடகங்கள் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற பல கேள்விகளை ஸ்டாலினிடம்  எழுப்பியது.அதற்கு முதல்வர் ஸ்டாலின் எந்த வித பதிலும் கூறாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தார்.தற்போது நீட் தேர்விற்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கு இட ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கிய 7.5% இடம் ஒதுக்கீட்டையும் இடையில் எந்த பிரச்சனைகள் நடக்காத வண்ணம் அவர்களுக்கு வழங்க வழி செய்ய வேண்டும்.அதேபோல அதிமுக ஆட்சியின் போது மாணவர்களுக்கு அளித்த நீட் பயிற்சியையும் சிறப்பாக அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment