1 கிளிக் தான் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது இனி ஈஸி! இந்த ஆவணங்கள் இருந்தாலே போதும்!
தமிழகத்தில் வீடு,அபார்ட்மெண்ட்டின் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் பொழுது மக்கள் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? எப்படி மாற்ற வேண்டும் என்பது குறித்து கூட பலருக்கும் தெரிவதில்லை.
இந்நிலையில் நீங்கள் புதியதாக வீடு அல்லது அபார்ட்மெண்ட் வாங்கும் பொழுது அதை விற்கும் நபரின் பெயரில் இருந்து தங்கள் பெயருக்கு மின் இணைப்பு மாற்றம் செய்வது குறித்த விளக்கம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு பெயர் மாற்றம் செய்ய கட்டணம் + GST என்று மொத்தம் ரூ.726 வசூலிக்கப்படுகிறது.
ஆன்லைனில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது எப்படி?
முதலில் tangedco.org என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.பின்னர் சர்வீசஸ்- எக்ஸிஸ்டிங் சர்வீஸ் கனெக்ஷன்,டேரிஃப் சேஞ்ச் ஆகிய பக்கத்திற்க சென்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
மற்றொரு வழி:
https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=NT என்பதை கிளிக் செய்து வாடிக்கையாளர் தங்கள் மொபைல் நம்பர் மற்றும் பெயரை பதிவு செய்ய வேண்டும்.பிறகு மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும்.அதை பதிவு செய்ய வேண்டும்.பின்னர் கேட்க்கப்படும் தகவல்களை கொடுக்க வேண்டும்.
பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை
2)சொத்து வரி ரசீது நகல்
3)விற்பனை பத்திரத்தின் நகல்
4)செட்டில்மென்ட் பத்திரம்
மேலும் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் பெயரில் இருக்கும் மின் இணைப்பை மாற்ற செட்டில்மென்ட் பத்திரம்,வாரிசு சான்றிதழ் போன்றவை தேவைப்படும்.