1 லட்சம் முதலீட்டுக்கு 1.4 கோடி ரூபாய் வருமானம்!! ஓரே மாதத்தில் அபார வளர்ச்சி!!
பிட்காய்ன் என்பது ஒரு நாணயம், மற்றும் அதற்கான கட்டமைப்பு. அது கணினிகளிலேயே உருவாகி, அவற்றின் வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகிறது. இன்றைய தேதியில் ASIC கணினிகள் எனும் வகையிலான சக்தி வாய்ந்த கணினிகளில் பிட்காய்ன் உருவாக்கம் நடைபெறுகிறது.
கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் பிட்காயின் பிரபலத்தை மொத்தமாக வாரிக்கொண்ட ஒரு கிரிப்டோகரன்சியாக விளங்குகிறது டோஜ்காயின். பல முன்னணி முதலீட்டாளர்களின் ஆதரவை தொடர்ந்து பல ரீடைல் முதலீட்டாளர்களின் ஆதரவும் இந்த டோஜ்காயின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
இதன் விலை குறைவாகவும், அதே நிலையில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் வாங்கும் காரணத்தால் இதன் மதிப்பு தொடர்ந்து பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இன்றைய தேதியில் வர்த்தகத்தில் டோஜ்காயின் மதிப்பு 0.689 டாலர் அளவை பிடித்து உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. வெறும் 4 மாதம் 5 நாட்களில் 13,938.38 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 140 மடங்கு அதாவது ஜனவரி மாதம் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்றைய மதிப்பு 1.4 கோடி ரூபாய். இன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது டோஜ்காயின்.