1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Rupa

1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Rupa

Updated on:

1.5 billion Facebook data in the hands of hackers! Shocking information released!

1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகளவு முன்னேறி வருகிறது.அவ்வாறு முன்னேறி வரும் நேரத்தில் அதிக அளவு ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடுகிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை யாரேனும் ஹாக் செய்து அதிலுள்ள விவரங்கள் அனைத்தும் எடுக்கின்றனர் போன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வகையில் தனியுரிமை விவகாரங்கள் என்ற ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் 1.5 பில்லியன் ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகளை ஹேக்கர் என்ற மன்றத்தின் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஃபேஸ்புக் உபயோகிப்பரின் தரவுகளான பெயர், மின்னஞ்சல் முகவரி, இருப்பிடம் பாலினம் தொலைபேசி போன்றவை ஹேக்கர் மன்றத்தில் காணப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்கள் பகிர்ந்த தகவல்களை ஹேக் செய்து அவை திருடப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இதில் விற்பனைக்காக திருடப்பட்ட தரவு வெளிப்படையாகவே அந்த ஹேக்கிங் நிறுவனத்தில் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறான விதிமீறல் செயலானது ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு பெரும் அச்சத்தை அளிக்கிறது.இவ்வாறு திருடப்பட்ட தரவுகள் பயன்படுத்தி ஒரு நபரின் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் ஹேக் செய்ய முடியும். அதேபோல இந்த வாரத்தின் இரு தினங்களுக்கு முன் ஃபேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான நிறுவனங்கள் இரவு நேரத்தில் ஆறு மணி நேரம் செயலிழந்து போனது.அதனால் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இன்னும் ஓர் சிலருக்கு அந்த செயலிழபிற்கு பிறகு மீண்டும் இணையத்தளங்கள் உபயோகிப்பதில் சிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.