வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் திருட்டு
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மற்றும் கோபாலகிருஷ்ணன். இருவரும் நண்பர்கள், இதில் கோபாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 1-ம் தேதி கோபாலகிருஷ்ணன் 2 கோடி ரூபாயை லோகநாதனிடம் கொடுத்து சில நாட்களில் வாங்கிவிட கூறி பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை லோகநாதன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது லோகநாதனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே லோகநாதன் இடம் தான் கொடுத்த இரண்டு கோடி ரூபாய் பணத்தை அவர் கேட்டு லோகநாதனுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்தும் லோகநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.