1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

0
212
#image_title

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் ஆனது தமிழகத்தில் பூதாகரமாக புரட்டிப் போட்டது, ஏனென்றால் குறிப்பிட்ட சில கஷ்டமைஸ் வாட்சிகளிக்  இதுவும் ஒன்று. இதன் விலை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் பலரும் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர்.

அந்த வகையில் திமுக, அண்ணாமலை வாங்கிய வாட்ச் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என குற்றச்சாட்டை வைத்ததை அடுத்து அவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் அண்ணாமலை,ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனக் கூறி சொத்து பட்டியலை வெளியிட்டார்.

இதனிடையே தான் வாங்கிய வாட்ச் எனக்குத் தெரிந்த ஓர் நண்பருடையது. அவர் கட்டிருந்தது எனக்கு பிடித்துப் போனதால் அதை நான் வாங்கினேன் என செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

ஆனால் முதலில் செய்தியாளர்கள் முன்னிலையில் என்னிடம் இருப்பது 147 ஆவது மாடல் வாட்ச் என்று கூறிய அவரே அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் 149 ஆவது வாட்ச் மாடல் என்ன மாற்றி மாற்றிப் பேசி மேற்கொண்டு ஏற்பட்ட சந்தேகத்தை உறுதி செய்தார்.

அதுமட்டுமின்றி அண்ணாமலை வாங்கிய ரஃபேல் வாட்ச் குறித்து திமுகவினர் ஓர் விலையின் ரசீதை வெளியிட்டனர்.

அதில் அவரது நண்பரிடம் இருந்து வாங்கப்பட்ட விலையில் உள்ள சீரியல் என்னும் இவரிடம் உள்ள வாட்சினுடைய சீரியல் இன்னும் வேறு வேறு ஆக உள்ளது தெரிய வந்தது.

இது முற்றிலும் பொய்யான ரசீது என அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில் அவராகவே தனது விலையின் ரசீதை வெளியிடுவதாக கூறினார். மேலும் அன்றே திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

அதேபோல வெளியிட்டதும் அண்ணாமலை காட்டிய ரசீதுடைய சீரியல் என்னும் வேறு வேறாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனை மக்கள் கவனிப்பதற்குள் திமுகவின் ஊழல் பட்டியல் என சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியது.

முதல்வர் ஸ்டாலின் என தொடங்கி அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தங்கை கனிமொழி என அனைவரும் உள்ள சொத்து பட்டியல் கிட்டத்தட்ட 1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பதாக அதில் தெரிவித்திருந்தது.

குறிப்பாக கலைஞர் டிவிக்கும் கனிமொழி அவர்களுக்கும் அதிக அளவில் பங்கு உள்ளதாக தெரிவித்திருந்ததை அடுத்து தற்பொழுது அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் 48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை இவ்வாறு பொய்யான தகவலை பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் என கூறி உள்ளார்.

மேற்கொண்டு இதுபோல உதயநிதி என அனைவரும் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அணுப்பியதற்கு,மன்னிப்பு கேட்க வாய்ப்பே இல்லை எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்கலாம் என அண்ணாமலைகூறியது குறிப்பிடத்தக்கது.

எனவே கனிமொழிக்கும் அவ்வாறான பதில் நோட்டீஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.