நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ கோதுமை இலவசம்..!! உணவுப்பொருள் வழங்கல் துறை

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் நவம்பர் மாதம் வரை ஒரு கிலோ கோதுமை இலவசமாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கோதுமை தர உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கிலோ கோதுமையை தரும்போது இலவசமாக கொடுக்கும் அரிசியின் அளவில் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.