கை வலிக்காமல் பித்தளை விளக்கை பளிச்சிட செய்ய பழுத்த தக்காளி 1 இருந்தால் போதும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

Photo of author

By Rupa

அனைவரது வீட்டு பூஜை அறையிலும் ஒரு பித்தளை விளக்காவது இருக்கும்.நீண்ட நாட்களாக பூஜையில் இருப்பதால் பித்தளை விளக்குகளில் எண்ணெய் பிசுக்கு,அழுக்கு போன்றவை படிந்திருக்கும்.இன்னும் ஒரு சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது.பித்தளை விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் மற்றும் குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நற்பலன்கள் கிட்டும்.

பித்தளை விளக்கில் காணப்படும் அழுக்குகள்,பிசுக்குகள் நீங்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

குறிப்பு 01:

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சோடா உப்பு,2 தேக்கரண்டி தூள் உப்பு மற்றும் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.இதை பித்தளை விளக்குகள் மீது அப்ளை செய்து தேய்த்து கழுவினால் அழுக்குகள்,எண்ணெய் பிசுக்கு அனைத்தும் நீங்கிவிடும்.

குறிப்பு 02:

ஒரு பாத்திரத்தில் சூடான நீர் ஊற்றி சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.அதன் பிறகு பித்தளை விளக்குகளை அதில் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பிறகு ஒரு பிரஷ் பயன்படுத்தி தேய்த்தால் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கு நீங்கி பளிச்சிடும்.

குறிப்பு 03:

ஒரு பழுத்த தக்காளி பழத்தை அரைத்து விளக்குகள் மீது அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு அப்டியே விடவும்.பிறகு ஒரு பிரஷ் பயன்படுத்தி தேய்த்தால் புதிது போன்று பளிச்சிடும்.

குறிப்பு 04:

ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளி போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.இந்த புளிக்கரைசலை பித்தளை விளக்குகள் மீது ஊற்றி தேய்த்தால் அழுக்குகள் நீங்கி புதிய பித்தளை விளக்கு போல் பளிச்சிடும்.