10 துளசி இலைகள் இருந்தால் போதும்! அனைத்தும் சாத்தியமாகும்! துளசியை எங்கு வைக்க வேண்டும்? பலன்?

Photo of author

By Kowsalya

இலைகளில் முதன்மையாக விளங்கும் துளசி இலை அந்த பகவான் ஸ்ரீமன் நாராயணனின் உருவமாக நாம் பார்க்கிறோம். துளசி செடி வைத்திருக்கும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதேபோல் நாராயணரின் அருளும், ஆசியும் நிச்சயம் இருக்கும். அத்தகைய துளசி இலைகளை எங்கு வைத்து வணங்கும் பொழுது எந்த பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

 

வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஒரு செடி என்றே கூறலாம்.அதுவும் இந்த துளசி இலையை வைத்து நாம் செய்ய கூடிய தீர்த்தம் நம்மை சுற்றி ஒரு நல்ல அதிர்வை உண்டாக்கி நல்ல பலனை தர உதவுகிறது.

 

துளசி நீர்:

 

வீட்டு பூஜை அறையில் ஒரு கை பிடி அளவு துளசி இலைகளை எடுத்து பித்தளை செம்பில் போட்டு வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அதே போல் நீங்கள் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம். இது வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை போக்க உதவுகிறது. திடீரென நீங்கள் சோர்வாக உணரும் பொழுது, அல்லது அடிக்கடி ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் வரும் பொழுது இந்த தீர்த்தத்தை மூன்று முறை தலையில் தெளித்துக் கொள்ளுங்கள்.

 

திருமண தடை உள்ளவர்களுக்கு:

 

கடன் பிரச்சினை உள்ளவர்கள்,திருமண தடை உள்ளவர்கள், சுய ஜாதகத்தில் செவ்வாய் பிரச்சினை உள்ளவர்கள் அனைவரும் உங்கள் பிரச்சினை தீர மஞ்சள் கலந்த தண்ணீரை 3 டம்ளர் அளவிற்கு தினமும் துளசி செடிக்கு தெளித்து விட்டு மனமுருகி வணங்க வேண்டும். பின் நெய் தீபம் ஏற்றி வணங்கி வந்தால் சுப காரியங்கள் அனைத்தும் கை வந்து சேரும்.

 

பால் நெய்வேத்தியம்:

 

தொழில் சம்பந்தமாக வரும் பிரச்சனைகளை தீர்க்கவும் மற்றும் உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரம் பெருகவும் வெள்ளிக்கிழமை அன்று துளசி செடிக்கு பால் அல்லது இனிப்பு பண்டங்களை வைத்து பூஜை செய்து . வழிபட்டு, பின்னர் நீங்கள் வைத்த நெய்வேத்திய உணவை கன்னிப் பெண்ணுக்கு தானம் செய்யுங்கள். இப்படி செய்து வர தொழிலில் மிக பெரிய வளர்ச்சி அடைவீர்கள்.

 

துளசி விதை:

 

திங்கள் கிழமை தோறும் 16 துளசி விதைகளை எடுத்து அதை சிறிய வெள்ளைத் துணியில் கட்டி கொண்டு, தினமும் உங்களுடன் எடுத்து செல்லுங்கள். நீங்கள் வேலைக்கு கொண்டு செல்லும் பையில் அல்லது பர்சில் இதனை வைத்துக் கொண்டு எடுத்து சென்றால் போதும், வேலை ரீதியான பிரச்சனைகள் நீங்கி உங்கள் திறமைக்கு உரிய பலனும் கிடைக்கும்.இலைகள் காய்ந்த பின் மீண்டும் வேறொரு புதிய இலைகளை இது போல் செய்து வைத்தால் போதும் பணத்தட்டுப்பாடு இல்லாமல் தனம் தாராளமாக சேரும்.

 

துளசி மாடத்திற்கு காலை, மாலை விளக்கேற்றி வணங்கி வந்தால் வேண்டிய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்கிற ஐதீகம் உண்டு. துளசியின் மகத்துவம் உணர்ந்து பூஜித்தால் பலன்களைக் கொடுக்கக் கூடியது. அதற்கேற்றவாறு வணங்கி பலனை பெறுங்கள்.