அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

Photo of author

By Pavithra

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

Pavithra

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

தமிழக வரலாற்றிலே முதன் முறையாக,திமுக எம்எல்ஏ வீட்டில் நடத்திய மொய் விருந்தில் ரூ 10 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கடைமடை பகுதி பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ அசோக்குமார் என்பவர் நேற்று தனது பேரப் பிள்ளைகளின் காதணி மொய்விருந்தை நடத்தினார்.இந்த மொய் விருந்தை பேராவூரணி ஸ்டேட் பேங்க் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடத்தினார்.இந்த மொய் விருந்தில் 100 கிடா வெட்டி 10000 பேருக்கு அசைவ விருந்து வைக்கப்பட்டது.

சுமார் 1300 கிலோ கறி பெரிய அண்டாவில் கமகமவென வென்றது.அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சைவ விருந்தும் போடப்பட்டது.காலையிலேயே மொய் நோட்டு எழுதுபவர்கள் பணத்தை வாங்குபவர்கள்,பணம் என்னும் மெஷினுடன் தயார் நிலையில்
இருந்தன.மேலும் குறிப்பிட்ட ஊரை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மொய் எழுதுவதற்கு வசதியாக தனித்தனி போர்டுகள் அமைக்கப்பட்டு மெய் எழுதும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் பணத்தின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் மற்றும் 10 -ற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டது.விழாவிற்கு வந்தவர்களுக்கு இலை நிறைய சோறும் கரண்டி நிறைய கறியும் போட்டு விருந்து
வைக்கப்பட்டது.விருந்தினை சாப்பிட்ட பிறகு ரூ.1000-தில் தொடங்கி 5 லட்சம் வரை விருந்தினர் மொய் எழுதிச் சென்றனர்.

இந்த மொய் விருந்தில் ரூ.10 கோடி மொய் வசூல் ஆகியது. இதுவே தமிழகத்தில் முதன்முறையாக அதிகபட்ச மொய் வசூலென்று ஆச்சரியமாக பேசப்படுகின்றது.திமுக எம்எல்ஏ அசோக்குமார் ஜாதி வேறுபாடின்றி அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொண்டு அவரால் முடிந்த மொய்யினை வைத்து வருவது வழக்கம்.இதுவே 10 கோடி மொய் வசூலானதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.