தமிழ் திரையுலகில் தான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை நீண்ட காலம் நிலை நிறுத்தி வென்றவர்கள் மற்றும் மக்கள் மனதில் நின்றவர்கள் என பட்டியலிட்டால் இளையராஜா ஏ ஆர் ரகுமான் அனிருத் இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம் ஆனால் சிறிது காலம் மட்டுமே ஆண்டாலும் தன் பெயரை நிலை நிறுத்தியவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
இவருடைய வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது பற்றியும் இவரால் ஏன் மற்ற இசையமைப்பாளர்களைப் போல இசையுலகில் நீண்ட காலம் சிறந்தவராக பயணிக்க முடியவில்லை என்பது குறித்தும் அவரே ஒரு சில இடங்களில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். காக்கா காக்கா மின்னலே லேசா லேசா போன்ற பல படத்தில் தன்னுடைய இசையால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் என குறிப்பிடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
பொதுவாக இசையமைப்பாளர்கள் என்று சொன்னாலே ஒரு படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது மற்றொரு படத்தில் வேலை வந்தது என்றால் அதையும் எடுத்து ஒன்றாக முடிக்கக்கூடிய திறமையை பெற்றவராக விளங்குவார்கள். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு தான் ஒரு படத்தில் பணி புரியும் பொழுது மற்றொரு படத்திற்கான வேலை வந்தாலோ அல்லது மற்றொரு படத்திற்கு இசையமைக்க கேட்டு வந்து யாராவது தனக்காக காத்திருந்தாலோ அது மிகப்பெரிய தண்டனையாக தோன்றும் என தெரிவித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட காரணத்தால் தான் நடிகர் விஜய் அவர்களின் உடைய 10 படங்களில் தன்னால் இசையமைக்க முடியாமல் போனதாகவும் 11 வது படமாக தான் நண்பன் திரைப்படம் தனக்கு கிடைத்தது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் எந்த ஒரு படத்திற்கும் முதல் முறையிலேயே பாடலுக்கான டியூன் சரியாக அமையாது என்றும் அதற்காக பலமுறை விடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு சில படங்களுக்கு இசையமைக்க காலதாமதம் ஏற்படும் என்றும் அதனால் தான் நான் ஒரு படத்தில் பணி புரியும் பொழுது மற்றொரு படத்தில் பணிபுரிய ஒத்துக்கொள்வதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.