10 இலட்சம் உயிரிழப்பு??? பீதியை கிளப்பும் கொரோனா!!
சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா உருமாற்ற வைராஸால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
2019-ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பரவியதில் இருந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது பல வகைகளில் மாறுபாடு அடைந்தது. அதிலும் குறிப்பாக ஒமிக்ரான் வகை மாறுபாடு மற்ற எல்லாவற்றையும் விட அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது.தற்போது சீனாவில் வேகமாக பரவி அந்த நாட்டு மக்களை அதிகளவு பாதித்து வரும் ஒமிக்ரான் BF.7 என்ற கொரோனா வைரசின் மாறுபாடு தற்போது தீவிரமடைந்துள்ளது.
தடுப்பூசியின் தன்மையை பொருட்படுத்தாமல் இந்த வைரஸ் மாறுபாடு தனிநபர்களை பாதிக்கிறது. ஆய்வு செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையின் படி இந்த புதிய வகை BF.7 பெரும்பாலும் சுவாச பாதையை பாதிக்கிறது. மேலும் காய்ச்சல், தொண்டை புண், இருமல், மூக்கில் நீர் வடிதல் ஆகியன இந்த வகை வைரஸ் BF.7 ஏற்படுத்தும் அறிகுறிகள்.
சீனாவில் தீவிரமடைந்துள்ள இந்த வைரஸ் அடுத்த மூன்று மாதங்களில் 60% மக்களை பாதித்து 10 இலட்சம் மக்கள் உயிரிழப்பு ஏற்படலாம் என்றும் ஆய்வு முடிவுகள் அறிவித்த நிலையில் உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பரவிவரும் இந்த வைரசால் உலக நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன. அதிலும் அண்டை நாடுகளை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் மீண்டும் கொரோனா வருமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே சுகாதார துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ள நிலையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மத்திய சுகாதார துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.சீனாவை தொடர்ந்து பிரேசில், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கொரோனா தீவிரம் காட்டி வருவதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.