Delhi: ரோக்ஜர் மேலா என்ற வேலை வாய்ப்பு திருவிழாவை காணொளி தொடங்கிவைத்த நரேந்திர மோடி.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் பதவி ஏற்ற பின், ரோஜ்கர் மேளா என்னும் வேலை வாய்ப்பு திருவிழாவை நேற்று டெல்லியில் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இந்த வேலை வாய்ப்பு திருவிழா நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் பிரதமரால் வழங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஐ சி எப் அம்பேத்கர் கூட்ட அரங்கிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு மத்திய அரசின் ஆறு துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 150 இளைஞர்களுக்கு பணி நியமன அணைகளை அமைச்சர் எல் முருகன் அவர்கள் வழங்கினார். மேலும், இதில் 91 பணியிடங்கள் அஞ்சல் துறையிலும் மற்றவை மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய எல் முருகன் அவர்கள், புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்குவது அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மொத்தம் 12 வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதில் 10 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலக நாடுகளுக்கு இந்தியா சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது என்றும் எல். முருகன் அவர்கள் கூறியுள்ளார். இதற்கு பிரதமரின் தொலைநோக்கு பார்வையை முழு காரணம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் மற்றும் ஐசிஎப் பொது மேலாளர் சுப்பாரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.