10 உணவுகள் போதும் இனி ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது!!
கால்சியம் என்பது நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் இதயம் நரம்பு தசைகள் மற்றும் உடலின் பிற பாகங்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
கால்சியம் எலும்பு உருவாக்குவதில் முக்கிய ஈடுபாடுடன் செயலாற்றுகிறது. தற்போது கால்சியம் குறைபாடு பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி எலும்பில் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.
கால்சியம் குறைபாடு ஏற்பட காரணம்
ஹார்மோன் கோளாறு கால்சியம் குறைபாடு உள்ள உணவுகள்
விட்டமின் குறைபாடு
சிறுநீரக நோய்கள்
தைராய்டு நோய்கள் செரிமான கோளாறு பாஸ்போர்ட் உணவுகள் போன்ற பல காரணங்களால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.
அறிகுறிகள்
மயக்கம், கவலை, மனசோர்வு பல் அரிப்பு, பசியிலப்பு தசைப்பிடிப்பு, எளிதில் எலும்பு முறிவு மற்றும் விரல், கை, கால், முகத்தில் உணர்வின்மை போன்ற பல அறிகுறிகள் ஏற்பட்டால் கால்சியம் குறைபாடு இருக்கிறது. இதற்கு கால்சியம் அதிகரிக்க வீட்டிலிருக்கும் சில உணவுகளை சேர்த்துக் கொண்டால் கால்சியம் அதிகரிக்கும்.
தேவைப்படும் பொருட்கள் கேழ்வரகு மாவு
- பாதாம்
சோம்பு
கற்கண்டு
பால்
தண்ணீர்
பேரிச்சம்பழம்
செய்முறை
கேழ்வரகு எடுத்துக் கொண்டு அதை மாவு போன்று அரைத்து கொள்ள வேண்டும். அதனுடன் பாதம் சோம்பு கற்கண்டு சேர்த்து பவுடர் போன்ற அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தினமும் காலையில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்த பின்னர் அரைத்து வைத்த பவுடரை சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக வேக வைத்து அதனை ஆற வைத்து நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை காலை உணவு உண்ணாமல் இருப்பவர்கள் தினமும் காலையில் குடித்து வந்தால் உணவு தேவை இல்லை . மேலும் இரவு தூங்கும் முன் இதனை குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து தினமும் தூங்கலாம். இதனை தினமும் குடித்து வருவதால் கால்சியம் குறைபாடு இருப்பவர்களுக்கு கால்சியம் அதிகமாகும். மேலும் மூட்டு வலிகளில் பிரச்சனை ஏற்படாத வகையிலும் இருக்கும்.