பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Photo of author

By Rupa

பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Rupa

10% reservation increase from 6% for scheduled castes! A sudden announcement by the government!

பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

எஸ் சி மற்றும் பிசிஇ பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்திய சட்ட மசோதாவானது ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கான ஒப்புதல் கிடைக்காமலே நிலுவையில் இருந்தது. இவ்வாறு இருந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த 17ஆம் தேதி பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த உத்தரவின் பெயரில் இன்று முதல் பழங்குடியின மக்களுக்கு ஆறு சதவீதத்தில் இருந்து பத்து சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த இட ஒதுக்கீட்டால் தற்பொழுது தெலுங்கானாவில் 50 சதவீதம் இடம் ஒதுக்கீடு உயர்ந்து காணப்படும். கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில அரசு பழங்குடியின மக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ரத்து செய்தது. இவ்வாறு பல ஆண்டுகள் இட ஒதுக்கீட்டை உயர்த்தாமல் இருந்ததால் பழங்குடியின மக்கள் , மத்திய அரசுதான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது இல்லை, மாநில அரசே இட ஒதுக்கீட்டை உயர்த்தி தரலாம் எனக் கூறியது. மக்களின் கோரிக்கையின் பெயரில் தெலுங்கானா அரசு, பழங்குடியின மக்களுக்கு மட்டும் ஆறிலிருந்து பத்து சதவீதமாக இட ஒதுக்கீடு உயர்த்தி உள்ளது. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.