இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

0
105

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

கொரோனாவால் நடுத்தர மகக்ள் தனது வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.முழு ஊரடங்கு என்பதால் புறநகர் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகி வந்துள்ளனர். நடை பாதை வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆஃப் ஒன்றை உருவாக்கியுள்ளது.

நடைபாதை தொழிலாகளுக்கு
உதவும் வகையில், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் ,மத்திய அரசு ரூ.10000 கடன் உதவி வழங்குகிறது. கடன் தொகையை மாதத் தவணையாக ஓராண்டுக்குள் திருப்பி தரவேண்டும் .இந்த கடனுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு தனியாக மொபைல் ஆஃப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்தது.

நகர்ப்புறங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகள் , கடன் விண்ணப்பங்களை பெறும் வகையில் மத்திய அரசு புதிய ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த புதிய செயலியை (ஆப்) (pm svanidhi app )மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் தொடங்கி வைத்தார்.கடந்த ஜூலை 2-ஆம் தேதி இந்த கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதுவரை 5.68 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.3 லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Previous articleசிவகார்த்திகேயன் நடிப்பில் ’டாக்டர்’ படத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் ஹிட் சாங் ரிலீஸ்!!
Next articleஇனி சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்! வருகிறது புதிய தளர்வுகள்!