காலை வெறும் வயிற்றில் உண்ணக் கூடாத 10 வகையான உணவுகள்!!

Photo of author

By Janani

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என சில உணவுப் பொருட்கள் உள்ளன. ஏனென்றால் அந்த உணவுப் பொருட்களில் உள்ள ஆசிட்கள் நமது வயிற்றுப் பகுதியில் உள்ள படலத்தை பாதிக்கும் என்பதால் தான். அந்த உணவுப் பொருட்கள் சத்தானதாகவே இருந்தாலும் அவற்றை காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொழுது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த உணவுப் பொருட்கள் எவை எவை என்பது குறித்து காண்போம்.
1. காஃபி: காஃபி யை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் உள்ள Caffeine நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே காஃபி ஐ குடிக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு குடிக்க வேண்டும்.
2. டீ: இதிலும் Caffeine உள்ளதால் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. காஃபியை காட்டிலும் டீ இல் அதிக அளவு அமிலத்தன்மை உள்ளது.
3. சோடா: சோடாவினை வெறும் வயிற்றில் குடிக்க கூடாது என அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏனென்றால் இதில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால் அது வயிற்றில் உள்ள ஆசிட்வுடன் கலந்து குமட்டல் மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம்.
4. தக்காளி பழம்: தக்காளி பாலத்தில் டானிக் ஆசிட் இருப்பதால் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் உள்ள ஆசிட் இரைப்பையில் உள்ள ஆசிட் உடன் இணைந்து கற்களை உண்டாக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
5. தயிர்: தயிரில் நல்ல பாக்டீரியா இருந்தாலும் அது வயிற்று படலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம்.
6. வாழைப்பழம்: வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் காலை வெறும் வயிற்றில் உட்கொண்டால் மெக்னீசியம் உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மெக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.
7. பேரிக்காய்: பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருந்தாலும் கூட அதனை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது வயிற்று வலி மற்றும் சளி சவ்வுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
8. இனிப்பு வகைகள்: காலை வெறும் வயிற்றில் இனிப்பு வகைகளை சாப்பிடும் பொழுது இன்சுலின் அளவு அதிகரித்து விடும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
9. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை:
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் இது அசிடிட்டியை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் போன்றவற்றை உண்டாக்கும்.
10. வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொழுது நெஞ்செரிச்சலும், வயிற்று வலியும் ஏற்படக்கூடும். பச்சை காய்கறிகள் சத்தானதாக இருந்தாலும் அதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது.