10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி!

Photo of author

By Hasini

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி!

Hasini

10 years completed list! 5000 years old area!

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி!

அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் தலைவர் அப்துல் காபி செய்தியாளர்களிடம் கூறும்போது அல் அய்ன் பகுதியில் இருந்து துபாய் செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் ஹிலி என்ற பாலைவன பகுதி ஒன்று உள்ளது. இங்கு அமீரக அரசின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் ஆய்வு குழுவினர் அப்பகுதியில் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த இடத்தில் செய்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் ஆச்சரியம் அடைய வைக்கும் அளவில் மிகத் தொன்மையான மக்கள் வாழ்ந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த ஆராய்ச்சியில் ஹிலி என்ற பகுதியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பகுதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் அதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக கடந்த 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த பகுதி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்காக தொல்பொருள் பூங்கா என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. இந்த இடத்தின் தன்மையை கருத்தில் கொண்டு ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. மேலும் அதன் பாரம்பரிய பகுதிகளின் பட்டியலிலும் இந்த பகுதி சேர்க்கப்பட்டது.

இங்குள்ள கட்டிடங்கள், பாறைகள் மற்றும் அந்த பகுதியில் கிடைத்த தடயங்களை ஆய்வு செய்ததில் அந்த இடமானது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது தற்போது யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பகுதிகளின் பட்டியலில் இந்த பகுதி இடம் பெற்று 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.