ஆபாச வீடியோவில் மோடியை சிக்க வைக்க 100 கோடி பேரம்.. வெளியாகும் ஆடியோ!! ஆட்சியே மாறப்போகும் டிவிஸ்ட்!!
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாகவே ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் குறித்து சற்று பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. மேற்கொண்டு ரேவண்ணா கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஜெர்மனியில் இருக்கும் நிலையில் அவர் இந்தியாவிற்கு வருவது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
மேற்கொண்டு இந்தியாவில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே கைது நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே தற்பொழுது ஜெர்மனியிலேயே இருந்து வருகிறார். இந்த ஆபாச வீடியோ சர்ச்சையால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜேடிஎஸ்-க்கு கர்நாடகாவில் அதிகப்படியான எதிர்ப்பே உள்ளது. இருப்பினும் முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது சிறிதளவு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கர்நாடகா பொருத்தவரையில் ஜேடிஎஸ் கட்சி அண்ணன் தம்பி என்று போட்டியின் நிலையிலே தான் இருக்கும். தற்பொழுது மூத்த அண்ணன் மீது இப்படி பாலியல் குறித்த பல புகார்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ளதால், அவரது தம்பி குமாரசாமியின் நிலை சற்று உயர்ந்துள்ளது. இதனை அவருக்கு சாதகமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.ஜேடிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இந்த ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து பல சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியது.
குறிப்பாக இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக கர்நாடகா பாஜக மாநிலத் தலைவர் தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஆளும் கட்சியானது தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணி காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் இவரிடம் 100 கோடி பேரம் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைவர் கூறுகையில், என்னிடம் டி கே சிவகுமார் இந்த ஆபாச வீடியோ குறித்து சர்ச்சையில் மோடி மற்றும் குமாரசாமியை சேர்த்து அவதூறு பரப்பும் படி 100 கோடிக்கு பேரம் பேசினார்.
இதற்கு முன் பணமாக ஐந்து கோடியையும் அனுப்பி வைத்தார். ஆனால் நான் முற்றிலும் மறுப்பு தெரிவித்து விட்டேன் இதனின் விளைவுதான் என் மேல் பல வழக்குகள் குவிக்கப்பட்டது. ஆனால் எதற்கும் போதுமான ஆதாரம் இல்லை. தற்பொழுது இந்த வழக்கிலிருந்து வெளியே வந்ததும் டி கே சிவகுமார் என்னிடம் பேரம் பேசிய ஆடியோவை வெளியிடுவேன் கட்டாயம் இம்முறை காங்கிரஸ் அரசு கவிழும் என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.