100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! 

Photo of author

By Rupa

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மத்திய அரசானது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் 100 நாட்கள் வேலை செய்யலாம். மேலும் இதற்கு தினக்கூலியாக 294 வழங்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட இந்த திட்டத்தின் கீழ் 5 கோடிக்கும் அதிகப்படியான மக்கள் மிகவும் பயனடைந்தனர். இதனின் ஊதியத்தை உயர்த்துமாறு அவ்வபோது மக்கள் கேட்டு வந்தனர்.அதே சமயத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப ஊதியத்தின் வரம்பும் மாறுபடும்.

இதுகுறித்து மத்திய அதிகராமளித்தல் கூட்டத்தில் பேசப்பட்டு தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.அந்தவகையில் தமிழகத்தின் நிலுவை தொகை உட்பட அனைத்தும் ஒதுக்கப்பட்டது.இதனுடன் தமிழக அரசின் நிதியும் சேர்த்து வழங்க ஒப்புதல் பெறப்பட்டது.இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் ரூ. 294 ஆக இருந்து தற்பொழுது 319 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வானது கடந்த மாதம் ஏப்ரல் 1 ஆம் தேதி வேலை செய்த நாட்களிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதுமட்டுமின்றி மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விதிமுறைகள் மற்றும் நிதியை பயன்படுத்தியதற்கான தரவுகள் உள்ளிட்டவற்றை முறையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.