100% திமுகவே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்! செய்வதறியாது தவிக்கும்  அதிமுகவினர்!

Photo of author

By Rupa

100% திமுகவே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்! செய்வதறியாது தவிக்கும்  அதிமுகவினர்!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது இந்நிலையில் மக்கள் முன் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.கூட்டணி கட்சிகள் மூலமும் மக்களின் ஓட்டுகளை பெற நினைகின்றனர்.அதனைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைக்குமா அல்லது அதிமுக ஆட்சி அமைக்குமா என்று ABP- சி என்ற செய்தி நிறுவனம் ஓர் கருத்து கணிப்பை நடத்தியது.இந்த சட்டமன்ற தேர்தலானதுதமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட  5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அந்த ஐந்து இடங்களிலும் இந்த APB- சி பத்திரிக்கை நிறுவனம் கருத்து கணிப்பை நடத்தியது.

அதில் தமிழகத்தில் திமுக,காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணி 43%  வாக்குகளை பெற்று 161 முதல் 169 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என இவர்கள் எடுத்த கருத்து கணிப்பில் தெரிய வருகிறது.அதனைத்தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 53 முதல் 61 இடங்களை கைப்பற்றும் எனக்  கூறியுள்ளனர்.மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு 2 முதல் 6 இடங்களில் வரும் எனவும் கூறினர்.அதனைத்தொடர்ந்து அமமுக கூட்டணிக்கு 1 முதல் 5  இடங்களும் இதர கட்சிகளுக்கு 3 முதல் 7 இடங்களும் கிடைக்கும் என என ABP-சி எடுத்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக திமுக  பதவியேற்க 40% மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.அதே அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர 29.7% மக்களே விரும்புகின்றனர்.இதுமட்டுமின்றி இந்த கருத்து கணிப்பில் மக்களில் பிரச்சனைகளையும் சேகரித்துள்ளனர்.அதில் 32.8% பேர் வேலையில்ல திண்டாட்டம் குறித்து தங்களது  பிரச்னையை பதிவு செய்துள்ளனர்.அதற்கடுத்து மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சனையை குறித்து 11.6% பேர் பதிவு செய்துள்ளனர்.10.5% பேர்சட்டம் ஒழுங்கை குறித்து தங்களது கோரிக்கைகளை பிரச்சனையாக  பதிவு செய்துள்ளனர்.இதில் அதிக அளவு வேலையில்லா திண்டாட்டத்தின் பிரச்சனையின் அளவே அதிகமாக உள்ளது.எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதனை முதலில்  தீர்க்க வேண்டும். வேலையில்லா திண்டாத்தை கட்டுபடுத்த வேண்டும்.