இங்கே 100 சதவிகித பயணிகள் அனுமதி! திரையரங்குகளும் திறக்கலாம்!

0
130
100 percent passenger admission here! Theaters can open too!
100 percent passenger admission here! Theaters can open too!

இங்கே 100 சதவிகித பயணிகள் அனுமதி! திரையரங்குகளும் திறக்கலாம்!

நாடே கொரோனாவின் இரண்டாவது அலையில் படாதபாடு பட்டு தற்போது தான் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டு உள்ளது. அதன் காரணமாக சில தளர்வுகளும், ஒவ்வொரு மாநிலங்களிலும், அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசியின் விளைவினால், உயிரிழப்புகளும், குறைந்து உள்ளது.

அதன் காரணமாக பலர் வெளியே தைரியத்துடன் நடமாட ஆரம்பித்து விட்டனர். அரசுகளும் பல தரப்பட்ட தளர்வுகளை கொடுத்து வருகிறது. ஆனாலும் வெளியே செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிலையம் சொல்லி கொண்டே உள்ளது.

தற்போது டெல்லியில் கொரனோ தொற்று பரவல் குறைந்ததை அடுத்து மேலும் பல தளர்வுகள் அங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகளின் படி, திங்கள்கிழமை முதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் 100 சதவிகித பயணிகளுடன், இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாக்கள் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்கில் ஊர்வலங்களில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம். திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.

அதேசமயம் 587 பேர் கொரோனாவில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,10,216 ஆக உயர்ந்துள்ளது. இது வரை கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,041 ஆக உள்ளது. இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleசிக்குன்னு நின்னு கவர்ச்சி காட்டும் யாஷிகா!! குதூகலத்தில் நெட்டிசன்கள்!!
Next articleஇந்தியாவின் இளம் படையை கண்டு அசந்துபோன இலங்கை அணி! தொடரை வென்று சாதனை!