இவர்களுக்கெல்லம் 100 யூனிட் மின்சாரம் ரத்து!! TNEB வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

Photo of author

By Rupa

TANGEDCO: ஒரே வீட்டில் வசித்து பல மின் இணைப்புகள் பெற்றவர்கள் குறித்து கள ஆய்வு நடத்தப்படுவதாக மின் வாரியம் அமைப்பானது தெரிவித்துள்ளது.

தமிழக அரசு மின்வாரியம் சம்மதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாராத்தையும் வழங்கி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பல குடியிருப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புக்களுக்கும் இந்த 100 யூனிட் இலவச மின்சாரமானது வழங்கப்படுகிறது.

இதனால் மின்சார இழப்பீடு ஏற்படுகிறது. இதனை கண்டறியும் வகையில் தற்பொழுது கள ஆய்வு நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு குறித்து வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. தற்பொழுது இதுகுறித்து விளக்கும் வகையில் தலைமை பொறுப்பாளர் கூறுகையில், வாடகை வீட்டிலிருப்பவர்கள் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம். அவரவர் வாடகை ஒப்பந்தம் மேற்கொண்டு ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை கொடுத்து இந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஓரே வீட்டில் மேல் முன் பின் மாடி கேட்டுக்கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புக்களை பெற்றிருப்பர். மேலும் இவர்கள் யாருக்கும் வாடகைக்கும் வீடு கொடுத்திருக்க மாட்டார், அவ்வாறு இருப்பவர்கள் இணைப்புகள் தான் ஒன்றிணைக்கப்படும். இதுவே அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

அதனால் வாடகை வீட்டிலிருப்பவர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு இதில் எந்த ஒரு சம்மதமும் இல்லை பயப்பட வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார். மேற்கொண்டு இதுகுறித்து சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கட்டாயம் உங்களது வீட்டில் வட்டார மின் நிலையத்தை அணுகுமாறு கூறியுள்ளார்.