1000  ரூபாய் 1500 ரூபாய் தரம்முண்ணு சொல்லரதை நம்பாதீங்க!! கஜானாவை சுரண்டும் ஆட்சி!! டிடிவி தினகரனின் அதிரடி பேச்சு!!

0
89
1000 rupees 1500 rupees standard unbelievable !! The regime that exploits the treasury !! DTV Dhinakaran's action talk !!
1000 rupees 1500 rupees standard unbelievable !! The regime that exploits the treasury !! DTV Dhinakaran's action talk !!

1000  ரூபாய் 1500 ரூபாய் தரமுண்ணு சொல்லரதை நம்பாதீங்க!! கஜானாவை சுரண்டும் ஆட்சி!! டிடிவி தினகரனின் அதிரடி பேச்சு!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்கு வக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து நேற்று  மதுரை மாவட்டம் திருமகளை தொகுதியில் அமமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு ஆதரவாக  பிரசாரம் செய்தார் டிடிவி தினகரன் அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது,

மதுரையில் திடீரென புகழ்பெற்ற சிலர், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல் சுற்றித் திரிகிறார்கள்.  மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் எண்ணம் எப்பொழுதும் நிறைவேறாது. ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் துரோகம் செய்தவர்களை வேரோடு சாய்க்கவே அமமுக கூட்டணி புறப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் தொழிற்சாலை உருவாக்கி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக கட்சியின் வேட்பாளர் டேவிட் அன்னாதுறக்கு ஆதரவாக டிடிவி தினகரன்  பிரசாரம் மேற்கொள்கையில் தங்கள் அரசு அனைத்தும் குடும்ப தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய், 1500 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து, போகாத ஊருக்கு வழி சொல்பவர்களை நம்பி வாக்களிக்க வேண்டாம். நீர் நிலைகளைத் தூர்வாருவதாக கூறி அதிமுக ஆட்சியில் கஜானாவே தூர்வாரப்பட்டுள்ளது என்று  கூறினார்.

author avatar
CineDesk