ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு 1000 இலவச டிக்கெட்டுகள்… இன்று இலவசமாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்…!

0
57

ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு 1000 இலவச டிக்கெட்டுகள்… இன்று இலவசமாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்…

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு 1000 இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால்,  சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 1000 இலவச டிக்கெட்டுகளை படக்குழு ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டது.

 

முதலில் விண்ணப்பிக்கும் 500 நபர்களுக்கு தலா 2 டிக்கெட்டுகள் வீதம் 1000 டிக்கெட்டுகளை வழங்கவுள்ளது. இந்த இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு http://jailer.sunpictures.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். சரியாக 1 மணிக்கு மேற்கூறிய இணையதளத்திற்கு சென்று தகுந்த அரசு ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம்.

 

முதலில் வரும் 500 நபர்களுக்கு மட்டுமே இந்த இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதை விண்ணப்பக்க 30 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு மேல் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.