பெரும்பாலும் சமூகவலைத்தளங்களில் பலர் நேரம் செலவழிப்பதற்கு முக்கிய காரணம் மீம்ஸ் (Memes). இந்த மீமஸ் வந்தபிறகு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள், நாட்டு நடப்புகள் போன்றவற்றை காமெடியாக சித்தரித்து மீம்ஸ் கிரியேட்டர்கள், மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் கைப்புள்ள, கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல, அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்று வித விதமாக நகைச்சுவை தலைப்புடன் பல பக்கங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டனர். பெருபாலும் வடிவேல், விவேக் போன்றவர்கள் தான் இவர்களின் ஹீரோ.
இந்நிலையில் இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதை வைத்து ஒரு மீம்ஸ் கிரியேட்டர் வித்தியாசமான ஒரு மீம்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
“ஆயிரம் வெட்டுக்கிளியை புடிச்சிட்டு வந்தா ஒரு குவாட்டர் இலவசம் என்று சொல்லுங்கள் ஒரே நாளில் வெட்டுக்கிளியின் இனமே அழிந்துவிடும் ” இந்த மீம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
தனது சினிமா காட்சியை வைத்து, நகைச்சுவையான கருத்துடன் சித்தரித்ததால் நடிகர் விவேக்கை இந்த மீம் மிகவும் கவர்ந்துள்ளது. இந்த மீம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நகைச்சுவையாக ஒரு கமெண்ட் போட்டுள்ளார் நடிகர் விவேக். அதாவது “ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!” என்றும் பாராட்டியுள்ளார்.
ஒரு குவாட்டருக்கு அவிச்ச முட்டை இலவசம் என்று அறிவித்த முதல் மாநிலமும் நாம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.