புதுச்சேரி அரசாங்கமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு ஒரு 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கட்டிட தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாயும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு 1500 ரூபாயும் போனசாக வழங்க உள்ளதாக கூறியுள்ளனர்.மேற்கொண்டு அங்குள்ள நியாய விலை கடைகளில் மிகவும் குறைந்த விலையில் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இருக்கையில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சேலை மற்றும் வேஷ்டிக்கு மாற்றாக ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் திக்கற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். மேற்கொண்டு பண்டிகை நாட்களில் இந்த பணமானது அவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
இந்த மாநிலத்தைப் போலவே மற்ற மாநிலத்திலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல வித சலுகைகளை அமல்படுத்தியுள்ளனர்.