இந்த ஆவணம் இருந்தால்  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! வெளிவந்த முக்கிய தகவல்!

Photo of author

By Rupa

இந்த ஆவணம் இருந்தால்  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! வெளிவந்த முக்கிய தகவல்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு அமைச்சர்களிடமும் பேட்டி எடுக்கையில் அனைவரும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவது குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

ஆனால்,அனைவரும் ஆட்டு மந்தைகளைப் போல ஒரே மாதிரியான பதிலை தான் தெரிவிக்கின்றனர். முதல்வர் அதற்கான ஆலோசனைகளை செய்து வருகிறார், கூடிய விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஒரே பதிலை தான் மாறி மாறி கூறினர். தற்பொழுது அதற்கான புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த மாதம்தோறும் ஆயிரம் ரூபாயை அனைவரின் வங்கி கணக்கில் போடுவதாக கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு உள்ளது எந்தெந்த குடும்பத்தை தலைவிகளுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். அவ்வாறு கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் திமுக கூறியது போல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். வங்கி கணக்கு இல்லாதவர்கள் வங்கி கணக்கை  திறக்கும் படி ஏதேனும் நிபந்தனைகள் தமிழக அரசு வைக்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.