ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

0
343

ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

மாநிலத்தில் உள்ள ஏழை மகளிர்க்கு இனிமேல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.

போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மாநிலத்தில் உள்ள மகளிர் எளிமையான முறையில் வாழ்க்கையினை நடத்திச் செல்ல வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதற்கு முன்னால் உள்ள திட்டங்களுடன் இந்த லட்லி பெஹ்னா யோஜனா திட்டமும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். இதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வருகின்ற மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகையைக் கொண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையானபொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். மற்ற மாநிலங்களில் நடைபெறாத செயல்கள் மத்திய பிரதேசத்தில் நடைபெறுகின்றன. யாரும் செய்யாத விஷயங்களை நான் செய்வேன். முதல் மந்திரி ஜனசேவா அபியான் மூலம் 83 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்கள் அரசு திட்டங்களை பெற தகுதியானவர்கள். 38 வெவ்வேறு திட்டங்களின் கீழ் பலன்களைப் பெற இவர்களுக்கு ஒப்புதல் படிவங்கள்  மாநிலத்தில் வழங்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் விடுபட்ட மக்களுக்கான விகாஸ் யாத்ரா திட்டமும் நாளை பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தொடங்கப் பெறும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

 

 

 

Previous articleமக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி! 
Next articleஇனி அரசு பேருந்துகளை மக்களே டிராக் செய்யலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here