மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக யாருக்கெல்லாம் ரூ 1000.. இதோ தமிழக அரசு அனுப்பும் மெசேஜ்!! உடனே செக் பண்ணுங்க!!
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் 15 தேதிக்குள் பெண் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களின் ஓட்டுக்களை பெற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது.ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னர் இந்த திட்டத்தில் பல நெறிமுறைகளை வகுத்து லட்சக்கணக்கான பெண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இதனால் கடும் கோபத்தில் இருந்த பெண்கள் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் பிரச்சாரத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்களிடன் தங்களின் ஆத்தங்கத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.தற்பொழுது அதற்கான புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
மேலும் முன்னாள் அரசு பெண் ஊழியர்கள்,முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவி மற்றும் புதிதாக திருமணமானவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அரசின் இந்த அறிவிப்பின் வாயிலாக மேலும் 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட உள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் புதியதாக சேர்க்கப்பட்டு வரும் பயனாளிகளுக்கு எப்பொழுது இருந்து ரூ.1000 வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த வண்ணம் உள்ளது.அதன்படி ஜூலை 12 ஆம் தேதிக்குள் புதிய பயனாளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டு ஜூலை 14 ஆம் தேதி வங்கி கணக்கில் ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்ட பின்னர் மாதந்தோறும் ரூ.1000 அனுப்பி வைக்கப்படும் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதேபோல் புதிய தகுதி வாய்ந்த பயனர்களின் பெயர் சேர்ப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.