இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்!

0
161

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்!

ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும்.
ஒரு விஷயத்தை புதியதாக ஆரம்பிக்கும் போது எதிர்மறையாக எதையும் முதலில் நினைக்காதீர்கள். நாம் நினைத்தது நடக்கும் என்று நேர்மறையான எண்ணத்தில் நினையுங்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதும் வெற்றி அடையாமல் போவதும் இறைவன் கையில் உள்ளது.

ஒரு சில பேர் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பே முடியாது என்று அப்படி சொல்லக்கூடாது. முடியாத என்ற ஒன்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்று நினைத்துக்கொண்டு செய்தல் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ஒரு வெற்றிலை நுனி கிழியாத எந்த ஒரு சேதாரம் இல்லாத வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலையை தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் அல்லது சந்தனத்தை பன்னீரில் குழைத்து ஒரு தீப்பெட்டி குச்சியால் அந்த சந்தனத்தை தொட்டு வெற்றிலையின் மேலே உங்களுடைய வேண்டுதலை எழுதவேண்டும்.

அந்த வெற்றிலையை சிறிது நேரம் பூஜை அறையில் வைத்து ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதார இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதற்குள் நீங்கள் எழுதியது காய்ந்துவிடும்.

இந்த வெற்றிலையை அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு பத்திரமாக வைத்துக் கொண்டு எடுத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் சென்ற காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் உங்களுக்கு சக்சஸ் ஆகும்.

எந்த ஒரு ஆசை இருத்தலும் வெற்றிலையில் எழுதி அந்த பொருளை வாங்குவதற்கு முயற்சி செய்யும்போது, இந்த வெற்றிலை உடன் அந்த ஆசையை சீக்கிரம் நிறைவேறிவிடும்.
மனதில் அனுமனை தைரியத்திற்கு கூப்பிடுங்கள். ஒரு துளி கூட மனதில் பயம் இருக்காது.

Previous articleஇனி உங்கள் வீடு தேடி வரும்!பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் வெளியான அறிவிப்பு! 
Next articleகடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா?