பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By Savitha

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 10725 கோடி ருபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் சமூக பயன்பாட்டு செயலியான பேஸ்புக் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.
இதையடுத்து ஐரோப்பிய ஒன்றிய பேஸ்புக் பயனாளர்களின் தரவை அமெரிக்காவிற்கு விற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து தகவல் தொழில்நுட்ப விதியை மீறியதற்காக பேஸ்புக் செயலியின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதமாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது. இந்திய மதிப்பில் 10725 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்டா நிறுவனம் “இந்த அபராதம் நியாயமற்றது. நாங்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். இந்த உத்தரவை நீதிமன்றம் மூலம் தடை கோருவோம்” என்று கூறியுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு இநத ஆண்டு மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.