நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!!
9,76 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
4025 மையங்களில் தேர்வுக்கு ஏற்பாடு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை மறுநாள் துவங்குகின்றன. 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. 11ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதை அடுத்து பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை மறுநாள் காலை துவங்குகின்றன.
தமிழகம்:
மொத்த மாணவர்கள்: 9,22,725
மாணவர்கள்: 4,66,765
மாணவிகள்: 4,55,960
புதுச்சேரி: 15,566
தனித்தேர்வு மாணவர்கள்: 37,798
மொத்த மாணவர்கள்:
9,76,089
சிறைவாசிகள்: 264
ஆண்கள்: 251
பெண்கள்: 13
மாற்றுத்திறனாளி மாணவர்கள்:13,151
மாணவர்கள்; 7751
மாணவியர்: 5400
தேர்வு மையங்கள்: 4025
தமிழகத்தில்:3976
புதுச்சேரியில்:49
தேர்வில் பங்கேற்கும் மொத்த பள்ளிகள்: 12,639