காதலன் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! ராசிபுரம் அருகே சோகம்!

Photo of author

By Sakthi

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிலிருக்கின்ற குளியலறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல் அறிந்த ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு காவல்துறையினர் விசாரித்தபோது வயிற்றுவலி காரணமாக, மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் போலீசாரின் தீவிர விசாரணையில் பல்வேறு உருக்கமான தகவல்கள் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் அத்திப்பலகானூரை சார்ந்த சூர்யா என்ற வாலிபரும் காதலித்து வந்திருக்கிறார்கள் அந்த வாலிபர் நேற்று முன்தினம் காலை அங்குள்ள கோழிப் பண்ணைக்கு வேலைக்கு சென்ற போது மின்வேலியில் சிக்கி பலியானார்.

காதலன் இருந்ததை அறிந்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவி மிகுந்த வேதனையடைந்திருக்கிறார், நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் செல்ல மனமின்றி வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார். அப்போது வீட்டிலிருப்பவர்கள் கேட்ட சமயத்தில் உடல்நிலை சரியில்லை அதன் காரணமாக பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

காதலன் உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அந்த மாணவி நேற்று முன்தினம் மாலையில் அவருடைய வீட்டில் உள்ள குளியலறையில் துணியை காய போடுவதற்கு பயன்படுத்தும் சிறிய கம்பி மூலமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மாணவி தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். காதலன் உயிரிழந்த சோகத்தில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.