10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு TIME TABLE வெளியானது!! ஜூலை 02 இல் ஆரம்பமாகிறது!!

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு TIME TABLE வெளியானது!! ஜூலை 02 இல் ஆரம்பமாகிறது!!

2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) அன்று வெளியானது.இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்,தேர்விற்கு வருகை புரியவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தார்.அதன்படி 10 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கான தேர்வு அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

மேலும் மே 16 முதல்‌ ஜூன் 01 துணைத்தேர்வு எழுத விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?

துணைத்தேர்வு எழுத தகுதியான மாணவ,மாணவிகள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை:

1)தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் – ஜூலை 02

2)ஆங்கிலம் – ஜூலை 03

3)கணிதம் – ஜூலை 04

4)அறிவியல் – ஜூலை 05

5)ஆப்ஷனல் மொழிப்பாடம் – ஜூலை 06

6)சமூக அறிவியல் – ஜூலை 08

பத்தாம்‌ வகுப்பு துணைத்தேர்வு கட்டணமாக ரூ.125 மற்றும் ஆன்‌லைன்‌ பதிவுக்‌ கட்டணமாக ரூ.75 என்று மொத்தம் ரூ.195 வசூலிக்கப்படுகிறது.இந்த கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில்‌ ரொக்கமாக செலுத்த வேண்டும்‌.

தேர்வெழுதிய 8,94,264 மாணவ மாணவிகளில் 75,521 பேர் தோல்வியடைந்திருக்கின்றனர்.அதேபோல் எதிர்பாராத சந்தர்பங்களால் தேர்வெழுத முடியாமல் போனவர்கள் பலர் இருக்கின்றனர்.அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மறுவாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு துணைத் தேர்விற்கு சிறப்பான முறையில் தயாராக வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.