நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்கள்!! ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்த ஆளுநர்!!

Photo of author

By Savitha

இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது, ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 11க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும் ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக் கொள்ளலாம் அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை, மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர்.

அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் ஒன்றிய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி.