ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணை??

Photo of author

By CineDesk

ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் தனித்தனியாக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதில்,ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமி-க்கு எதிராக வாக்களித்தனர்.இந்த நிலையில் எதிர்த்து வாக்களித்த 11 பேர் மீதும் அதிமுக தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக, கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இருந்தபோதிலும்இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துவிட்டது.மேலும் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து திமுக அணியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பினரை கூறியிருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி மூன்று மாதங்கள் ஆன போதிலும் அதிமுக தரப்பினரிடம் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கடந்த மாதம் திமுக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. மணிப்பூர் தீர்ப்பை மேற்கோள் காட்டி 11 பேர் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்ற முடிவு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியது.

மீண்டும் இந்த வழக்கு கடந்த ஜூன் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.உச்சநீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் “உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி மூன்று மாதங்கள் ஆன நிலையிலும் எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அதிமுகவிடம் கேள்வி எழுப்பினர்” மேலும் இந்த வழக்கினை ஜூன் எட்டாம் தேதி ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் 11 எம் எல் ஏ களுக்கு எதிரான தகுதிநீக்க வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.திமுக தரப்பு ,சபாநாயகர் தரப்பு வாதங்கள் இன்று முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இதனை குறித்து சபாநாயகர் தனபாலுக்கு கடிதமொன்று எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ளார்.11 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு உயர் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும், மேலும் அரசுக்கு எதிராக 11 பேர் வாக்களித்து இருந்தாலும், அவர்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை,11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்த நடவடிக்கை மன்னிக்கப்பட்டது, என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.