Tamilnadu Gov: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசானது பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணாக்கர்களுக்கு பல்வேறு புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து எந்த ஒரு காரணமுமின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலை உணவு சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். மேற்கொண்டு உயர் கல்வி படித்து முடித்த மாணவர் மற்றும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி புரியும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கி வருகிறது.
இதையெல்லாம் தவிர்த்து இல்லம் தேடி கல்வி, விலையில்லா நோட்டு புத்தகம், மிதிவண்டி உள்ளிட்டவற்றையும் வருடம் தோறும் வழங்குகிறது. இவ்வாறு இருக்கையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வருடந் தோறும் 11 ஆம் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தமிழ் திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 1500 ரூபாய் ஊக்க தொகையும் வழங்குவதுண்டு.
இதில் அரசு பள்ளி மட்டுமின்றி தனியார் பள்ளியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இந்த தேர்வில் தேர்ச்சி அடையும் 50% அரசு பள்ளி மாணவர்களுக்கு வருடம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வானது அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்குரிய விண்ணப்பத்தினை இம்மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி 19ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சென்று விண்ணப்புக்கும்படி கூறியுள்ளனர். மேற்கொண்டு விண்ணப்ப கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.