12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. மத்திய அரசில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By CineDesk

12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. மத்திய அரசில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய ரிசர்வ் காவல் படையான சி.ஆர்.பி.எஃப் பிரிவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

சி.ஆர்.பி.எஃப் தேர்வுகள் இனி தமிழிலும் எழுதலாம் என்று கடந்த மாதம் மத்திய அரசு தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது, மத்திய ஆயுதப்படையில் ஆயுதப்படை காவலர் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மற்றும் நடைபெற்று வந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கேணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்ப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது, 251 உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள் (பணியிடங்கள்)

 

251 ( காலியிடங்களின் எண்ணிக்கை)

 

மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (கல்வித்தகுதி)

 

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 31-05-2023 அன்று 40 வயதாக இருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.25,500 – 92,300 (இதர படிகள், சலுகைகள் உண்டு,

 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

கணினி வழி எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் என இதன் மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

கணினி வழி தேர்வுகள் முடிந்த பிறகு உடற்தகுதி தேர்வு நடைபெறும்.

சிஆர்பிஎஃப் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது குறித்து யூடியூப் உள்ளிட்ட இணையத்தங்களில் பல்வேறு தகவல்கள் உள்ளன் கணினி வழி தேர்வில் என்னென்ன கேட்கப்படும் எந்தெந்த புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் தற்போது இணையத்தளங்களிலே, யூடியூபில் நமக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி தேர்வில் நாம் தேர்ச்சி பெறலாமே என்று போட்டித் தேர்வு ஆசிரியர்கள், வல்லுநர்கள் கூறுகின்றனர். உடற்கல்வி தகுதிக்கு நாம் பல்வேறு பயிற்சிகளை செய்வது அவசியம், ஓடுதல், தாவுதல் கையிறு ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு நாம் தகுந்த உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:

31.05.2023 மேலும் விவரங்கள் அறிய www.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.crpf.gov.in என்ற இணையதளத்தின் மூ

லம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.