பாளையங்கோட்டையில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓட்டம் !

Photo of author

By Savitha

பாளையங்கோட்டையில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓட்டம் !

சம்பவத்தில் வார்டன் ராஜேந்திரன் கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் இருவரும் மது போதையில் இருந்தார்களா என பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது.

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறார்கள் தப்பி சென்ற சம்பவத்தில் வார்டன் ராஜேந்திரன் கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் இருவரும் மது போதையில் இருந்தார்களா என பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது.

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது இங்கு நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் 18 வயதிற்கு கீழ் குற்றம் புரிந்தவர்கள் இங்கே அடைக்கப்பட்டுள்ளனர் மொத்தம் உள்ள 20 சிறார்களில் 12 சிறார்கள்.

இன்று மாலை ஆறு மணி அளவில் இரவு உணவு வாங்க செல்லும்போது அங்கே இருந்த வார்டனை ராஜேந்திரன் மற்றும் கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் இரண்டு பேரையும் தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் கூர்நோக்கு இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது வார்டன் மட்டும் கண்காணிப்பாளர் இருவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

இதை அடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கே மது அருந்தியதற்கான பரிசோதனை நடைபெற்றது.