திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Sakthi

12 exam results will be released as planned!! Official Announcement!!

திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் +2 என்றழைக்கப்படும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 8ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அது போல பதினோராம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளும் திட்டமிட்டபடி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. இந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேவர்வை தமிழ்நாடு, புதுச்சேரி என இரண்டு இடங்களையும் சேர்த்து சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

இதற்கு மத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே மே 8ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் சமீபமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது திட்டமிட்டபடி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி தான் வெளியாகப் போகிறது. ஏனென்றால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்வுத் துறை கூறியுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்.

அது மட்டுமில்லாமல் பதினொராம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நாளை முடிவடையும் எனவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதனால் பதினொராம் வகுப்பு தேர்வு முடிவுகளும் திட்டமிட்டபடி வெளியாக வாய்ப்புள்ளது.