ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!!

0
113
#image_title

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!!

திருவள்ளூர் செங்குன்றம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. இந்த ரசாயன கிடங்கில் பிளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா உள்ளிட்ட வேதிப்பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்ப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், ரசாயன பொருட்கள் மேல் மழை நீர் பட்டு நச்சுப்புகை வெளியேறி வருகிறது, மேலும் இந்த ரசாயன கிடங்கில் இருந்து வெள்ளை நிற நச்சுப்புகை வெளியேறி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

நச்சுப்புகை வெளியேற முக்கிய காரணம் 4  நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட ரசாயன கழிவுகளை ஆழமாக மண்ணில் தோண்டி புதைக்காமல், மேலோட்டமாக புதைக்கப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ரசாயன பொருட்களை, ஜே.சி.பி மூலம் ஆழமாக மண்ணை தோண்டி ரசாயன கழிவுகளை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
Parthipan K