சிவாங்கியிடம் சிறுவன் கேட்ட விஷயம்! நிறைவேற்றுவாரா?

Photo of author

By Kowsalya

சிவாங்கி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சூப்பர் சிங்கர் 7- இல் அறிமுகமாகி குக் வித் கோமாளி சீசன் 1 &2 என இரண்டிலும் தனது அப்பாவியான மற்றும் அழகான செய்கையால் மக்கள் மனதை கவர்ந்தவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவாங்கியின் ஃபேன் தான்.

 

இப்பொழுது 12 வயதான ஒரு சிறுவன் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டு சிவாங்கியவுடன் சமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளாராம். அதை அந்த சிறுவனின் தாய் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு பகிர்ந்துள்ளார். அதற்கு சிவாங்கி அதை பகிர்ந்து நன்றி என்று பதிலளித்துள்ளார்.

 

அந்த 12 வயது சிறுவனின் தாய் பகிர்ந்த விஷயம், எனது மகனுக்கு 12 வயது, அவன் சிறிது ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளான். அவன் தியேட்டரில் படம் பார்ப்பதை விரும்ப மாட்டான். அந்தக் கூட்டம் மற்றும் நெரிசல்கள் அதிகமாக இருப்பதால் அவனால் தியேட்டரில் படம் பார்க்க முடியாது. அதனால் அவனை தியேட்டருக்கு கூட்டிட்டு செல்வதையே நாங்கள் விட்டு விட்டோம். பிரைம் வீடியோவில் தான் அவன் படங்களை பார்ப்பான். அவனுக்கு தெறி, மடகாஸ்கர், நான் ஈ போன்ற திரைப்படங்கள் பிடிக்கும். அதேபோல் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அவர்களின் பாடல்களை மிகவும் விரும்பி கேட்பான்.

 

சமீபத்தில் நானும் எனது அம்மாவும் குக் வித் கோமாளி அஷாங்கி மற்றும் புகழ் அவர்களின் வீடியோவை பார்க்க ஆரம்பித்தோம். எனது மகனின் ஆன்லைன் வகுப்புகளிலும் இதுபோல் ஒரு பகுப்பு வந்ததால் அவனும் இந்த குக் வித் கோமாளியை பார்க்க ஆரம்பித்தான். நாங்கள் அனைவரும் சேர்ந்து பார்த்தோம். ஒவ்வொரு முறையும் பார்க்கும் பொழுது அவனுக்கு பெயர்களை சொல்லி தந்தோம், அப்போது அவன் அஸ்வின் அண்ணா சிவாங்கி அக்கா, புகழ் அண்ணா என்று அவர்களை பெயரிட்டு கூற ஆரம்பித்தான்.

 

அதன் பிறகு நாங்கள் குக் வித் கோமாளி சீசன் 2 எபிசோட்களை பார்க்க ஆரம்பிக்கும் பொழுது அஸ்வின் மற்றும் சிவாங்கியை அவன் அடையாளம் கண்டுகொண்டு மிகவும் ஆர்வத்துடன் பார்த்தான். அப்பொழுது அவன் சொன்னான் நான் சிவாங்கி அக்காவுடன் சமைக்க வேண்டும் என்று. நான் அவனுக்கு எடுத்துக் கூறினேன், இது மிகப்பெரிய சோ, பெரியவர்கள் தான் சமைப்பார்கள், இது சிறிய பையன் ஆகிய நீ சமைக்க முடியாது என்று எடுத்துக் கூறினேன். அவன் உடனே 2035 நான் பெரிய பையன் ஆகிவிடுவேன். அப்போது சிவாங்கி அக்காவுடன் சேர்ந்து சமைப்பேன் என்றான்.

 

இதற்கு முன் அவன் இப்படியான விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து இல்லை. எங்களுடன் அமர்ந்து அனைத்து CWC 2 எபிசோடுகளை பார்க்கிறான். சிவாங்கியின் கியூடான எக்ஸ்பிரஷன்களைப் பார்த்து அவன் மகிழ்ச்சி அடையும் போதெல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

தாங்க்யூ சிவாங்கி & CWC 2 டீம்.

 

இதை சிவாங்கி ட்விட்டரில் பகிர்ந்து நன்றி என்று தெரிவித்துள்ளார். பலரும் இதை பார்த்து ஷேர் செய்து சூப்பர் சிவாங்கி என்று மகிழ்ந்து வருகிறார்கள்.