தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதத்தில் 1,271 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,271 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. பருவமழை காலம் முடிந்த பிறகும் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏடிஸ் – எஜிப்டி வகை கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சலை பரப்பும். இவை மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. இந்த ஆண்டை பொருத்தவரை ஜனவரியில் 866 பேருக்கும், இந்த மாதத்தில் இதுவரை 351 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தற்போது 216 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் அதிகம் போ் பாதிக்கப்பட்டனா். அவை, படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.