ரத்துசெய்யப்படுமா +2 பொதுத்தேர்வு? இன்று முக்கிய ஆலோசனை!

0
112
Tamil Nadu Assembly
Tamil Nadu Assembly

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கொரோனா காரணமாக 9,10, 11,ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது.அதோடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

12ம் வகுப்பு பொதுதேர்வு அடுத்த மாதம் ஆரம்பிக்கிறது, இதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நோய்தொற்று பரவலும் அதிகரித்து வருகின்றது. இந்த தொற்று பரவலை கருத்தில்கொண்டு மே மாதம் நான்காம் தேதி முதல் ஆரம்பிக்க விருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைத்தும் மத்திய கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.

அதன்படி தமிழ்நாட்டிற்கும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கபடுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதுகுறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் பொதுத்தேர்வை கண்காணிப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.