காதலன் காதலை மறுத்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

Photo of author

By Kowsalya

காதலன் தன் காதலை மறுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

சுப்பிரமணியபுரம் தேர்வு மையத்தில், கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுத சென்றுள்ளார். அங்கு உடையான்பட்டி பகுதியை சார்ந்த 17 வயது மாணவர் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவனும் தேர்வு எழுத வந்துள்ளார்.

அங்கு இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரிந்துள்ளது. கோபம் அடைந்த மாணவியின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் மே மாதம் 19 ஆம் புகார் அளித்துள்ளனர்.

காவல் துறையினர் மாணவனின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மாணவன் ஜாமினில் இருந்து வெளியே    வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவன் ஜாமினில் வெளியே வந்ததை அறிந்த மாணவி, அவருக்கு தொடர்பு கொண்டு இப்பொழுது தான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவன், உன்னால் தான் நான் சிறைச் சென்றேன். உன் காதலும் வேண்டாம், எதுவும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று கூறி மொபைலை ஸ்விச் ஆப் செய்துள்ளார்.

இதனை மிகவும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு உள்ள மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.