12 ஆம் வகுப்பில் தேர்ச்சியா? மத்திய அரசு ரூ.75 லட்சம் கடன் கொடுக்க அழைக்கிறது! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Rupa

12 ஆம் வகுப்பில் தேர்ச்சியா? மத்திய அரசு ரூ.75 லட்சம் கடன் கொடுக்க அழைக்கிறது! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தற்போதைய காலகட்டத்தில் படித்து முடித்த இளைஞர்கள் பலர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதததால் சுயத் தொழில் தொடங்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவர்களுக்கு என்று மத்திய அரசு பிரதான் மந்திரி ரோஜ்கர் யோஜனா திட்டத்தை கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கியது.

இந்த திட்டத்தின் நோக்கம் படித்த வேலை இல்லாத பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சுயத் தொழில் தொடங்க கடன் வழங்குவதாகும்.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதில் கடன் வழங்குவதில் SC மற்றும் ST பிரிவினருக்கு 22.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.குறைந்த வட்டி மற்றும் மானியம் மானியத்துடன் கடன் வழங்கப்படுவதால் இளைஞர்கள் பலர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பலனடைந்து வருகின்றனர்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு ரூ.5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.இதில் அதிகபட்சம் ரூ.50 லட்சம் மானியமாக பெறலாம்.தற்பொழுது இந்த மானிய தொகையை ரூ.75 லட்சமாக தமிழ்நாடு அரசு உயர்த்தியிருக்கிறது.

பொதுப் பிரிவை சேர்ந்த 21 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.எஸ்சி,எஸ்டி,பிசி மற்றும் எம்பிசி பிரிவைச் சேர்ந்த 21 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறையினர் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.