குஜராத்தில் நேர்ந்த கோர சம்பவம் – 13 பேர் உயிரிழப்பு

Photo of author

By Parthipan K

குஜராத் மாநிலம் சூரத்தில், ஏடாகூடமாக ஓடிய லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்கள் மீது மிகவும் வேகமாக பாய்ந்துவிட்டது.

இந்த கோர சம்பவத்தில் 13 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நபர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி சம்பவ நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் நசுங்கி சேதமடைந்தன.

இச்சம்பவத்தை நிகழ்த்திவிட்டு தப்பி ஓடிய லாரியையும் அந்த லாரி ஓட்டுநரையும் அம்மாநில போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.