மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்!

0
164

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்!

சேலம் ஜருகுமலை மக்கள்:

சேலம் ஜருகு மலையில் பல காலமாக பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதியான நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம் என அசிப்படை வசதிகள் எதுவும் இல்லை.பல நாட்களாக இது அனைத்தையும் நிறுவி தரும் படி ஜருகுமலை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல இவர்களுக்கு தக்க நேரத்தில் ஜாதி சான்றிதழும் வழங்கப்படாமல் உள்ளதாக கூறுகின்றனர்.

இங்கு ஜருகுமலையில் சுமார் 500 வீடுகள் உள்ளது,கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சேலம் பெரிய மாநகரமாக இருந்தாலும் கூட இந்த ஜருகுமலை மக்கள் அவசர மருத்துவ உதவிகளுக்கு கர்ப்பிணி பெண்கள் முதியோர்களை தொட்டில் கட்டி தான் தூக்கி சென்றனர். சமீபத்தில் தான் அங்கு சாலை வசதி செய்யப்பட்டது. அதன்பின் நிலை மாறி உள்ளது. மாநகராட்சியில் இருந்து கொண்டு இவர்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்கவே இத்தனை ஆண்டு காலம் கடந்து விட்டது.

அது மட்டும் இன்றி அங்கு மாணவர்கள் படிக்கும் வகையில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லை ஏழு கிலோமீட்டர் வரை கடந்து தான் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் படித்து வருவதாக கூறுகின்றனர். இதுபோல பல கோரிக்கைகளை ஜருகுமலை மக்கள் வைத்துள்ளனர்.

மாரி செல்வராஜின் மாமன்னன்:

தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் திரைப்பட த்தின் சூட்டிங் சேலம் மாவட்டத்தில் தான் நடைபெற்று வருகிறது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் காண உதயநிதி சேலத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது பழங்குடியின மக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி மனு உடனடியாக ஜருகுமலை மக்களின் நலத்திட்ட உதவிக்காக ரூ.13 லட்சத்தை காசோலையாக வழங்கியுள்ளார்.

சேலத்திற்கு வந்த உதயநிதி:

மாரி செல்வராஜ் பழங்குடியினரை பாதித்த சம்பவங்களையே படங்களாக எடுத்து வருகிறார். அவ்வாறு இருக்கும் பொழுது சேலத்திற்கு வந்த உதயநிதி மனு கொடுத்ததும் அதனை உடனடியாக நிறைவேற்றி நிதி உதவி செய்தது மக்கள் மத்தியில் சந்தேகம் அடைய செய்கிறது. ஜருகுமலை மக்களை தவிர்த்து தற்பொழுது வரை சேலத்தில் பல இடங்களில் பல கோரிக்கைகளை மக்கள் தொடர்ச்சியாக வைத்து தான் வருகின்றனர்.

ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு தற்பொழுது படப்பிடிப்பிற்கு வரும் பொழுது குறிப்பிட்டு இந்த பழங்குடியினருக்கு மட்டும் காசோலை வழங்கியது மக்கள் அனைவரையும் சந்தேகிக்க வைக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜின் ரெக்கமண்டில் இப்பணம் வழங்கப்பட்டது எனவும் கூறுகின்றனர்.

Previous articleரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்?
Next articleமேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி!