கொட்டி தீர்க்க போகும் கனமழை, எந்தெந்த மாவட்டங்களில்?

Photo of author

By Parthipan K

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழை பெய்யவுள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் மழை ஏற்பட வாய்ப்புள்ளது. லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வேலூர் , ராணிப்பேட்டை , திருவள்ளூர் , கிருஷ்ணகிரி , ஈரோடு , சேலம் , தர்மபுரி , திருச்சிராப்பள்ளி , கரூர் , நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரான சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அங்கங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.